சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராபிக் ராமசாமி போன்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெய் , அதுல்யா, வைபவி நடிப்பில் புதிய படம் ஒன்றை துவங்கி இயக்கிவருகிறார். இப்படத்திற்கு கேப்மாரி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி தெரிவித்திருந்தார். 

இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் தயாராவதாக கூறினார்.

தற்போது ஜெய் தனது டப்பிங் பணிகளை முடித்ததாகவும், போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் போய் கொண்டிருப்பதாகவும் செய்தி தெரியவந்தது.