ஆகச் சிறந்த நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டு(2022) கடைசியாக வெளிவந்த சாணிக் காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன.

முன்னதாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்து வருகிறார். 

இதனிடையே மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள வாஷி திரைப்படம் கடந்த ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாகியு
ள்ளது. இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ள வாஷி திரைப்படத்திற்கு ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

ஜி.சுரேஷ் குமார் நிறுவனம் சார்பில் மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து வாஷி திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் வாஷி திரைப்படத்திலிருந்து யாதொன்னும் பரயாதே வீடியோ பாடல் தற்போது வெளியானது. வாஷி படத்தின் யாதொன்னும் பரயாதே வீடியோ பாடல் இதோ…