இந்திய திரையுலகின் சிறந்த நடிகையாகவும் முன்னணி நட்சத்திர கதாநாயகியாகவும் வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு பகத் பாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் துரை படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாகவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார் கீர்த்தி. இந்த வரிசையில் மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் ரிலீசாகவுள்ள திரைப்படம் வாஷி. 

கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரிக்க, விஷ்ணு.ஜி.ராகவ் எழுதி இயக்கியுள்ள வாஷி படத்திற்கு, ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

வழக்குரைஞர்கள் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள வாஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வாஷி திரைப்படத்திலிருந்து புதிய செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…