தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.

Keerthy Suresh Penguin OTT Release on June 19th

இதனை தொடர்ந்து தெலுங்கில் மிஸ் இந்தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பென்குயின் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார்.

Keerthy Suresh Penguin OTT Release on June 19th

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படம் அமேசான் ப்ரைமில் ஜூன் 19ஆம் தேதி நேரடியாக வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.