இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பென்குயின். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. 

Keerthy Suresh Penguin Official Trailer Keerthy Suresh Penguin Official Trailer

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அனில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். 

Keerthy Suresh Penguin Official Trailer Keerthy Suresh Penguin Official Trailer

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. தனுஷ், நானி மற்றும் மோகன் லால் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இந்த ட்ரைலரை வெளியிட்டனர். திரில்லர் கலந்த இந்த ட்ரைலரை பார்க்கையில், படத்தின் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.