கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா...? விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | April 02, 2020 20:57 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.
இவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
கீர்த்தி சுரேஷுக்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.இதுகுறித்து விசாரித்தபோது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்துள்ளது.