மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகியது. லாக்டவுனில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் பார்வையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருந்தனர். ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அனில் க்ரிஷ் எடிட்டிங் செய்தார். இதனைத்தொடர்ந்து தற்போது முதல் சிங்கிளான கோலமே பாடலின் வீடியோ வெளியானது. சுஷா பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். 

சமீபத்தில் தளபதி விஜய்யின் பிறந்தநாளில் வயலின் வாசித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து வெளியான இப்பாடல் வீடியோ பட்டையை கிளப்பி வருகிறது. நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ் இந்தியா, சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி, வெங்கி இயக்கத்தில் ரங் தே போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளது.