தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர்  நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ரங்தே படத்தின் பர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிஸ் இந்தியா திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கீர்த்தி நடிப்பில் ரங் தே படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வரும் இந்த படத்தில் ஆதி,ஜெகபதி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தை Nagesh Kukunoor இயக்குகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு குட் லக் சகி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.