கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளனர். ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. 

Keerthy Suresh About Depression And Fever While Shooting For Penguin

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அனில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் சிங்கிளான கோலமே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Keerthy Suresh About Depression And Fever While Shooting For Penguin

இந்நிலையில் பெண்குயின் திரைப்படம் உருவான விதம் குறித்தும், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார். படத்தில் நடிக்கும் போது மனஅழுத்தம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி உங்கள் கருத்து என கேட்டபோது, படத்தில் ஒரு காட்சி கஷ்டமாக இருந்தது போல் தெரிந்தது. அந்த நேரத்தில் எனக்கு குளிர் ஜுரம் வந்தால் கூட படத்தை பற்றி தான் யோசித்து கொண்டிருப்பேன். டிப்ரஷன் எல்லாம் இல்லை என்று கூறினார். படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷுக்கு குளிர் ஜுரம் வந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரியவர, உடம்பை பார்த்து கொள்ளுங்கள் கீர்த்தி என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.