விவசாயம் செய்யும் நடிகை கீர்த்தி பாண்டியன் !
By Sakthi Priyan | Galatta | April 20, 2020 20:09 PM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் விவசாயம் செய்வதற்கு இது தான் ஏற்ற நேரம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இந்த இடம் எங்களது வீட்டிற்கு சொந்தமான நிலம். யாரும் நுழையமுடியாத வகையில் வேலி அமைத்து இருக்கிறோம். எனவே அரசின் வழிமுறைகளை பின்பற்றி தான் விவசாயம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தும்பா படத்திற்கு பிறகு ஹெலன் தமிழ் ரீமேக்கில் அவரது தந்தை அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Landscaping! ♥️
— Keerthi Pandian (@ikeerthipandian) April 17, 2020
Let the farming begin 🙌🏽 #quarantine #farming
(Again, this is our quarantine gated home property, it is not a public area. We are being very much responsible 🙃) pic.twitter.com/j3e7xkgwPu
Goa and Manipur become coronavirus-free
20/04/2020 07:03 PM
USA wants to send experts team to China to investigate COVID-19 outbreak!
20/04/2020 07:00 PM