ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் மகள் ஆவார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

முன்னதாக தனது தந்தை அருண் பாண்டியன் உடன் இணைந்து மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி தேசிய விருதும் பெற்ற ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்காக கீர்த்தி பாண்டியன் நடித்த அன்பிற்கினியாள் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக இயக்குனர் ஷாலினி இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் கண்ணகி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே கீர்த்தி பாண்டியன் நடிப்பில் ரொமான்டிக்கான காதல் படமாக தயாராகியுள்ள திரைப்படம் கொஞ்சம் பேசினால் என்ன. இயக்குனர் கிரி மர்ஃபி இயக்கத்தில், கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படத்தில் கௌதம் சுந்தர்ராஜன் ஆஷிக் காம்னா பத்ரா ஆகாஷ் பிரேம்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் கொஞ்சம் பேசினால் என்ன படத்திற்கு லெனின்.A மற்றும் A.R.செல்வம் ஒளிப்பதிவில், தனசேகர் படத்தொகுப்பு செய்ய,  தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். இந்நிலையில் கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.