தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகளான நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனையடுத்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று தேசிய விருது பெற்ற ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ,ரௌத்திரம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் அன்பிற்கினியாள் படத்தில் நடிகர் அருண் பாண்டியன் உடன் இணைந்து நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார்.

அடுத்ததாக நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து நடிகைகள் அம்மு அபிராமி மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் கண்ணகி திரைப்படத்தை இயக்குனர் ஷாலினி இயக்கியுள்ளார்.

ஈ5 என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்கைநூன் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் கண்ணாடி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னணி பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் தற்போது கண்ணகி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்ணகி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் கண்ணகி திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.