கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கழுகு' இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியானது. ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். முதற் பாகத்தில் சூசைட் பாயிண்டில் இறப்பவர்களின் உடலை கொண்டுவரும் ஆட்களாய் இருந்தவர்கள், இரண்டாம் பாகத்தில் வேட்டைக்காரர்களாய் வருகின்றனர்.

தற்போது படத்தின் அடி ஏண்டி புள்ள வீடியோ பாடல் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடலுக்கு மோகன் ராஜன் வரிகள் எழுதியுள்ளார்.