விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த சஞ்சீவ் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஆல்யா மானசா.

சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.அடுத்ததாக சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார்.பிரியங்கா எம் ஜெயின் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார்.

இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவுக்கு வந்தது.இதனை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் சஞ்சீவ்.சஞ்சீவ் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள கயல் தொடரில் நடிக்கவுள்ளார்,இந்த தொடரின் நாயகியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோஹினி தொடரில் புகழ்பெற்ற சைத்ரா ரெட்டி நடிக்கிறார்.

இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்