பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

Kavin Video Call With Lift Heroine Amirtha Aiyer

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Kavin Video Call With Lift Heroine Amirtha Aiyer

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமிர்தாவிற்கு கவின் வீடியோகால் செய்து வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.மேலும் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தியதால் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை அதனால் இந்த புகைப்படத்தை போடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.