விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இவரது அஸ்கு மாறோ என்ற ஆல்பம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர டாக்டர்,Beast உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார்.

தற்போது புகழுடன் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ள கவின் அதில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துவரும் டாக்டர் படத்தில் நடந்த சுவாரசிய விஷயம் ஒன்றை பகிர்ந்துகொண்டார் கவின்.

செல்லம்மா பாடல் ஷூட்டிங்கில் எனர்ஜி ட்ரிங்க் ஒன்றை கையில் எடுத்த சிவகார்த்திகேயன் அதனை வைத்து கவினிடம் மதுரை முத்து ஸ்டைலில் ஒரு ஜோக்கை தெரிவித்துள்ளார் மேலும் சிவாங்கி போல பல நேரங்களில் மிமிக்ரி செய்து அசத்துவார் என்று கவின் தெரிவித்துள்ளார்.