தொலைக்காட்சி சீரியலான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் கவின். இதையடுத்து சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் வேட்டைய்யன் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். சில படங்களில் சிறிய வேடத்தில் தோன்றிய இவர், நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவானார். 

Kavin

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகென் போன்றோருடன் சேர்ந்து இவர் செய்த லூட்டிகள் ஏராளம். இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலின் போது எடுத்த போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார். 

Kavin

தற்போது லிஃப்ட் என்கிற படத்தில் அம்ரிதா அய்யருடன் இணைந்து நடித்துள்ளார். பிகில் படத்தை தொடர்ந்து அம்ரிதாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், இப்படத்தை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.