விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

சமூகவலைத்தளங்களில் தற்போது கவின் மற்றும் பவித்ரா இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போல சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.இது ஏதேனும் புதிய படமாக இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இது ட்ராப் செய்யப்பட்ட ஒரு வெப் சீரிஸ் ஷூட்டிங் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.இது படமா அல்லது வெப் சீரிஸா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இந்த ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது