பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இன்று படத்தின் நாயகன் கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிக்பாஸ் தொடரின் மூலம் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இயக்குனர் நெல்சனுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் கவின்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றின் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகின்றனர்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கவின் அவ்வப்போது ரசிகர்களுடன் தன்னுடைய கருத்துக்களை பகிர்வார்.

சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் வெளியாகி செம வைரல் ஹிட் அடித்து வருகிறது.இந்த பாடலில் அனிருத்,சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக நெல்சனின் வேறமாரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே பலரும் நெல்சன் படங்களில் அவரது காமெடி டைமிங்க்கிற்காக நடிக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.இந்த மீம்களில் ஒன்றை கவனித்த கவின் உங்க ரசிகர்களுக்காக இதை செய்யுங்க என்று நெல்சனை டேக் செய்து விட்டார் இதற்கு பதிலளித்த நெல்சன் நீ என்னை செஞ்சுட்டு இருக்க போதும் என்று கூறியுள்ளார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.