தமிழ் சினிமாவில் இன்றைய இளம் நடிகர்களில் குறுகிய காலத்தில் பல தரமான படங்களில் நடிப்பவராக மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவராக ரசிகர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுவிட்ட நடிகர் கதிர். மதயானை கூட்டம் திரைப்படம் துவங்கி கிருமி, ஜடா, சத்ரு போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். சிகை என்னும் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சர்பத். செவென் ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் சர்பத் படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார். இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். 

கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், சர்பத் திரைப்படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 4 மணியளவில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, சமுத்திரகனி நடித்த ஏலே படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதுமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்கவுள்ள படத்தில் கதிர் நடிக்கிறார். ஆனந்தி மற்றும் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஏஏஏஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. த்ரில்லர் டிராமா பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது.