தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து இளம் கதாநாயகனாக திகழ்பவர் நடிகர் கதிர். மதயானைக் கூட்டம், விக்ரம் வேதா, கிருமி, சிகை போன்ற படங்களால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தளபதி விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஜடா திரைப்படம் வெளியானது. 

Kathir Praises Farmers And Shares A Picture

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Kathir Praises Farmers And Shares A Picture

இந்நிலையில் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கையில் மண்வெட்டியை வைத்து மண் அள்ளிப்போடுகிறார். அதில் விவசாயிகளின் அன்றாட வேலைதான், சிட்டி வாழ்க்கையில் ஒர்க்அவுட்டாக மாறியிருக்கிறது. என்ன சொல்றது போங்க... என பதிவிட்டுள்ளார். கதிரின் இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. கதிர் அடுத்ததாக சர்பத் எனும் படத்தில் நடித்து வருகிறார்.