வித்தியாசமான கதைகள்,கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்திருப்பவர் கதிர்.மதயானை கூட்டம்,கிருமி,பரியேறும் பெருமாள் என பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் கதிர்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் விக்ரம் வேதா,பிகில் போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தும் அசத்தி இருக்கிறார் கதிர்.இவர் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மலையாளத்தில் ஹிட் அடித்த இஷ்க் என்ற படத்தின் ரீமேக்கில் கதிர் ஹீரோவாக நடித்து வந்தார்.

Eagles Eye Production இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சிவ் மோஹா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.ரேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த திவ்யபாரதி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆசை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதே பெயரில் அஜித்தின் பெரிய ஹிட் படம் ஒன்று 1995-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.