பாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

கடந்த சில நாட்கள் முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாஸ். அரசியல் பணிகள் மற்றும் சமூக சேவைகள் செய்து வருவதால், அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வருவதால், அவருக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் என அவர்களுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அப்போது கருணாஸ் பேசுகையில், நான் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது சென்னை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறேன்.  

தனக்கு மருத்துவர்கள் அளிக்கும் கவனிப்பு மற்றும் சிகிச்சையால் நான் மெதுவாக & பாதுகாப்பாக மீண்டு வருகிறேன். முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இச்செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார் கருணாஸ். சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் கருணாஸின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.