லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர்ஹிட்டாகிய திரைப்படம் கைதி. தீபாவளி விருந்தாய் வெளியான இந்த படம் பட்டி தொட்டியெங்கும் பாட்டையே கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ஜீத்து ஜோஸஃப் இயக்கிய தம்பி படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. 

karthi sultan

ரெமோ பட புகழ் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு சதிஷ், பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து, பேட்ச் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் வில்லன் கருடா ராம் இதில் வில்லனாக நடிக்கிறார். 

bakkiyarajkannan

தற்போது இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனிடம் கேட்ட போது, மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்பதால் சம்மர் ரிலீஸாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.