கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மஹாவீர் கர்ணா,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள சீயான் 60 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Karthik Subbaraj About Chiyaan Vikram Role in Chiyaan 60

இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Karthik Subbaraj About Chiyaan Vikram Role in Chiyaan 60

இந்த படம் குறித்து சமீபத்தில் பாலிவுட் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜ்,இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம்,நானும் அவருக்கு ரசிகர் தான்.லாக்டவுனில் அவரை சந்தித்தபோது அவரிடம் எனக்கிருந்த ஐடியாகள் சிலவற்றை தெரிவித்தேன்.அவருக்கு அது பிடித்திருக்கவே உடனே இந்த பட வேலைகள் ஆரம்பமானது.இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,ஆதலால் வேறு எதுவும் இந்த படம் குறித்து தெரிவிக்கமுடியாது என்று கூறினார்.ஆக்ஷன் ட்ராமா படமான இதில் விக்ரமை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Karthik Subbaraj About Chiyaan Vikram Role in Chiyaan 60