சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வந்தவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சித்துவிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த வருட இறுதிக்குள் திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இன்று அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சித்ரா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிந்துவின் குடும்பத்தினருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.சித்ராவின் உடலை நேரில் பார்க்க அவருக்கு நெருக்கமான பல பிரபலங்களும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்து சென்று வருகின்றனர்.ராஜா ராணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கார்த்திக் சசிதரன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

A post shared by karthik sasidharan (@karthik_sasidharan17)