துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை உருவாக்கினார். 

karthick narens emotional tweet to his father

இன்று வெளியான இத்திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 1 மணி நேரம் 52 நிமிடம் இருக்கும் இப்படம் விறுவிறுப்பாக நகர்வதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

karthick narens emotional tweet to his father karthick narens emotional tweet to his father karthick narens emotional tweet to his father

தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன், தனது தந்தைக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நீங்கள் கற்றுத்தந்த விஷயத்தினால் தான் இருண்ட கட்டத்திலிருந்து என்னால் வெளியே வர முடிந்தது என குறிப்பிட்டுளார். கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரியவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.