கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் அடுத்து நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார்.சர்தார் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை கார்த்தி நிறைவு செய்திருந்தார்.

விருமன் படத்தினை 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமத்து பாணியில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கை கார்த்தி நிறைவு செய்துவிட்டு புது லுக்கில் சர்தார் ஷூட்டிங்கில் விரைவில் இணையவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.அடுத்தடுத்த அப்டேட்களால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.