கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Karthi Tweets About Kaithi Success Thanks Fans

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

Karthi Tweets About Kaithi Success Thanks Fans

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து படத்தின் நாயகன் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும்,தனது வெற்றி தோல்வியின்போது தனக்கு துணையாக இருந்த ரசிகர்களுக்கும்,பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.