2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.இந்த இரண்டு படங்களுமே விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Karthi Sulthan To Clash With Vijay Thalapathy 64

இதனை ஒரு ஆரோக்கியமான போட்டியாக திரையுலகினர் பார்க்கின்றனர்.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி,மாளவிகா மோஹனன் உள்ளிட்டோர் நடிக்கும் தளபதி 64 படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Karthi Sulthan To Clash With Vijay Thalapathy 64

தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி,ரஷ்மிகா மந்தனா நடிக்கும் சுல்தான் படமும் ஏப்ரலில் வெளியாகும் என்று தெரிகிறது.இரண்டு படங்களுக்கும் சரியான ரிலீஸ் தேதி வெளிவராத நேரத்தில் இரண்டு படங்களும் மோத வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த அறிவிப்பு வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

Karthi Sulthan To Clash With Vijay Thalapathy 64