கார்த்தியின் சர்தார் படத்தின் பாடல்கள் இதோ !
By Aravind Selvam | Galatta | October 19, 2022 17:34 PM IST

கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.
இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டுஅக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய Jukebox வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் பாடல்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
EXCLUSIVE: Is Sardar inspired from Oru Kaidhiyin Diary? - Karthi reveals!
18/10/2022 12:32 PM
Exciting release update on Karthi's Sardar - here is what you need to know!
17/10/2022 09:14 PM