தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகராகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு(2022) தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், கார்த்தி புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸானது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.  இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட விருமன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி முதல் பிரபல OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

blazing through your feed with all the right emotions#VirumanOnPrime, Sept 11 pic.twitter.com/Hhual2awRa

— prime video IN (@PrimeVideoIN) September 7, 2022