தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த சுல்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

முன்னதாக  ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்க, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக ரிலீஸாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. 

அடுத்ததாக கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளா என்பது குறிப்பிடத்தக்கது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செல்வக்குமார்.எஸ்.கே ஒளிப்பதிவில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் யுவன் இசையில் பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ள கஞ்சா பூவு கண்ணால எனும் விருமன் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…