கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | February 18, 2021 19:12 PM IST

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கர்ணன் ஷூட்டிங் நடைபெற்றது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப்போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் ஆகியோரை நினைத்தால் பெருமையாக உள்ளது. கர்ணன் அனைத்தும் கொடுப்பான் என்று புகழாரம் சூட்டி படத்தை விமர்சித்திருந்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் கையில் விலங்குடன், முகத்தில் ரத்தம் வழிய காணப்படுகிறார் தனுஷ். 9-ம் தேதி ஏப்ரல் மாதம் சம்மர் ரிலீஸாக வெளியாகிறது கர்ணன். முன்பு இதன் அறிவிப்பை டீஸராகவும் வடிவமைத்து வெளியிட்டனர் படக்குழுவினர். கையில் கத்தியுடன் கம்பீரமாக மலையில் தனுஷ் நிற்பது போல் அமைந்தது அந்த டீஸர். படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல திங்க் மியூசிக் பெற்றுள்ளதாக கர்ணன் படக்குழுவினர் நேற்று தெரிவித்தனர். படத்திற்கான டப்பிங் பணிகளை கடந்த வாரம் நடிகர் தனுஷ் நிறைவு செய்தார்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் கர்ணன் வெளியாகும் என அறிவித்தது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கண்டா வரச் சொல்லுங்க பாடல் வீடியோ வெளியானது. கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.
கர்ணன் திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்ஷய்குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார். அத்திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்து போயஸ் கார்டனில் தான் கட்ட இருக்கும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையை முடித்து ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
Dhanush's Karnan - First Single | Kandaa Vara Sollunga | Santhosh Narayanan
18/02/2021 08:17 PM
Prabhu Deva's Bagheera - Promo Glimpse Video | Adhik Ravichandran
18/02/2021 06:25 PM