ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

Karan Johar Praises Atlee Bigil Vetrimaaran Asuran

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

Karan Johar Praises Atlee Bigil Vetrimaaran Asuran

ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்த பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர்,வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த அசுரன் படம் பார்த்து அசந்துபோய்விட்டேன் தனுஷ் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்று தெரிவித்தார்.அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.அட்லீ எல்லா படங்களையும் நான் ரசித்து பார்த்துள்ளேன் கமர்சியல் சினிமாவின் மேஜிசியன் என்று அட்லீயை கரண் ஜோகர் புகழ்ந்துள்ளார்.