கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ப்ரோமோ வீடியோ !
By Sakthi Priyan | Galatta | February 25, 2020 17:35 PM IST

தென்னிந்திய நடிகர்களில் தரமான கதைகளில் கவனம் செலுத்தும் நடிகர் துல்கர் சல்மான். கடைசியாக வரனே அவஷ்யமுண்டு எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இவர் கைவசம் வான் திரைப்படம் உள்ளது. தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். மசாலா கஃபே இசையமைத்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் துல்கரின் நண்பராக நடித்துள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவான இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் டையலாக் ப்ரோமோ வெளியானது. பிப்ரவரி 28-ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.
Oh My Kadavule - Kadhaippoma Video | Ashok Selvan, Ritika Singh | Leon James
25/02/2020 06:00 PM
Gautham Menon's next will be on the lines of Asuran | CONFIRMS GVM!!!!
25/02/2020 06:00 PM
Samantha gets support from Aditi Rao Hydari
25/02/2020 04:40 PM