சின்னத்திரையில் துவங்கி இன்று தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக அசத்தி வருபவர் நடிகர் போஸ் வெங்கட். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் மைல்-கல்லாக அமைந்தது. இதை தொடர்ந்து கோ, சிங்கம், தீரன், கவன் போன்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். இவர் இயக்குனராக களமிறங்கிய திரைப்படம் கன்னி மாடம். 

KanniMaadam Kannimaadam

ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் முஹம்மது ஹஷீர் தயாரித்த இந்த படத்திற்கு ஹரி சாய் இசையமைத்திருந்தார். இனியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. ஆழமான உணர்வகளை மையப்படுத்தி இத்திரைப்படத்தை செதுக்கியிருந்தார் போஸ் வெங்கட். 

Kannimaadam Kannimaadam

தற்போது படத்திலிருந்து மூணு காலு வாகனம் பாடல் வீடியோ வெளியானது. ரோபோ ஷங்கர் பாடிய இந்த பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். ஆட்டோ ஆந்தமாக இடம்பெற்ற இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.