விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பகல் நிலவு.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சஹானா.இந்த தொடரில் வில்லியாக நடித்து அசத்திய இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

அடுத்ததாக சன் டிவியில் அழகு தொடரில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற சீரியல் நடிகையாக மாறினார் சஹானா.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்து அசத்தி வந்தார் சஹானா.இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதனை தவிர பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சஹானா.பாலாவின் தாரைதப்பட்டை,விஜய் ஆன்டனியின் சலீம் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.மேலும் தொகுப்பாளராகவும் ஒரு சேனலில் பணியாற்றி அசத்தியுள்ளார்.இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே மற்றும் தாலாட்டு சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது தனக்கும் மருத்துவர் அபிஷேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக சஹானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sahana (@actresssahanaa)