மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி இப்போது முன்னணி சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் அக்ஷிதா போபையா.நடிகையாக வேண்டும் என்ற கனவோடு மாடலிங்கை தொடங்கிய இவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் முதல் கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.கன்னடத்தில் நடிகையாக சில படங்களில் நடித்து அசத்தினார் அக்ஷிதா போபையா.

படங்களில் நடித்துக்கொண்டே சீரியல்களிலும் நடிக்க முடிவெடுத்தார் அக்ஷிதா போபையா.தனது முதல் பட ரிலீஸுக்கு பிறகு தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்தார் அக்ஷிதா போபையா.அழகு,சுமங்கலி,தாழம்பூ உள்ளிட்ட தொடர்களில் நடித்து அசத்தினார் அக்ஷிதா போபையா.இதனை தொடர்ந்து ஒரு கன்னட சீரியலிலும் நடித்துள்ளார் அக்ஷிதா போபையா.

இவற்றை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைபோடு போட்டு வரும் கண்ணான கண்ணே தொடரில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அக்ஷிதா போபையா.இந்த தொடரில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இவரது நடிப்புக்காக இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அக்ஷிதா போபையா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவரது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்