சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.அடுத்ததாக சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் தொடரின் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார் ரியோ.இவர் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணுவோம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

பவித்ராவும் அடுத்ததாக சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.ரியோ,பவித்ரா இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன் குறும்படம்,ஆல்பம் பாடல் உள்ளிட்டவற்றில் தோன்றி அசத்தியிருந்தனர்.இவர்கள் இணைந்து கண்ணம்மா என்னம்மா என்ற ஆல்பம் பாடலில் பணியாற்றியுள்ளனர்.

இந்த பாடலில் குக் வித் கோமாளி பாலா இவர்களுடன் நடித்துள்ளார்.இந்த பாடல் லிரிக் வீடியோ கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த பாடலின் மியூசிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.செம கலர்புல்லான இந்த மியூசிக் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்