கண்மணி சீரியல் ஹீரோயினின் அசத்தல் நடனம் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | December 25, 2020 21:29 PM IST

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் சஞ்சீவ்.மெட்டி ஒலி,அண்ணாமலை,ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ்.சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரின் நாயகனாக நடித்து பலரின் இதயங்களிலும் இடம்பிடித்தார் சஞ்சீவ்.நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.
கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.அடுத்ததாக திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் சஞ்சீவ் நடித்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார் சஞ்சீவ்.சில காரணங்களால் அந்த தொடரை விட்டு வெளியேறிய சஞ்சீவ் , பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல TRP-யையும் பெற்றிருந்தது.
கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் லீஷா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட லீஷா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சீரியல் நிறைவடைந்த பிறகு வீடியோக்கள் எதுவும் பதிவிடாமல் இருந்தா லீஷா தற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.