சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஷாம்பவி குருமூர்த்தி.குழந்தை நட்சத்திரமாக சன் டிவி சீரியலில் நடித்த இவர் பின்னர் சில வருடங்கள் கழித்து தாமரை என்ற தொடரில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார் ஷாம்பவி.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா தொடரில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார்.அடுத்ததாக தெலுங்கில் மல்லேஸ்வரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார் இந்த சீரியல் செம ஹிட் அடிக்க தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார் ஷாம்பவி.

இதனை தொடர்ந்து சில சூப்பர்ஹிட் தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளார் ஷாம்பவி.சன் டிவியின் செம ஹிட் தொடரான கண்மணி தொடரில் இரண்டாவது நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவராக மாறினார் ஷாம்பவி.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இவற்றை தவிர சில படங்களிலும் நடித்துள்ளார் ஷாம்பவி.

சமீபத்தில் தெலுங்கில் தொடங்கிய புதிய தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஷாம்பவி.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ஷாம்பவி.தற்போது ஷூட்டிங்கில் பிரபல ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்தபோது அதில் பிளாஸ்டிக் இருந்ததாகவும் அதனை தெரியாமல் சாப்பிட்டு கஷ்டப்பட்டேன் இதனை அந்த ஹோட்டலில் எதிர்பார்க்கவில்லை என்று செம கடுப்பாகி தெரிவித்துள்ளார்.இனி அந்த ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்பவர்கள் கவனமாக இருக்கும்படியும் எச்சரித்துள்ளார்.