சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் கண்மணி மனோகரன்.பிரபல மாடல் ஆக இருந்து விளம்பரப்படங்கள்,குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கண்மணி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட கண்மணி மனோகரன் அடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கண்மணி மனோகரன்.முதலில் வில்லி போல ஆரம்பித்த இவரது அஞ்சலி கதாபாத்திரம் பின்னர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியது.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.

சில நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று அசத்துவார் கண்மணி.ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கிய சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் கண்மணி.சில எதிர்பாராத காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் கண்மணி ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது.இவரது கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்று தெரியவந்துள்ளது.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய தொடரில் ஹீரோயினாக பட்டையை கிளப்ப கண்மணிக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.