சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் சஞ்சீவ்.மெட்டி ஒலி,அண்ணாமலை,ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ்.சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரின் நாயகனாக நடித்து பலரின் இதயங்களிலும் இடம்பிடித்தார் சஞ்சீவ்.நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.

கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வரும் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் சஞ்சீவ் நடித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார் சஞ்சீவ்.சில காரணங்களால் அந்த தொடரை விட்டு வெளியேறிய சஞ்சீவ் , பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.

கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்திருந்தார்.இவர் மீண்டும் எப்போது டிவியில் வரப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் திருமகள் தொடர்களின் சங்கமம் இந்த வாரம் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் சஞ்சீவ் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.