கங்குவா தயாரிப்பாளரின் அசத்தலான புதிய தெலுங்கு படம்... ஆனால் இது டெடி ரீமேக் அல்ல! கவனம் ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ

டெடி ஸ்டைலில் அல்லு சீரிஷின் BUDDY பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,Kanguva producer ks gnanavel raja allu sirish in buddy first look out now | Galatta

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, பிரம்மாண்ட படைப்பாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கும் அடுத்த புதிய தெலுங்கு திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் GLIMPSE வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கடைசியாக இந்த 2023 ஆம் ஆண்டில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் கதாநாயகர்களாக நடித்த பத்து தல திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. KGFல் 1800 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு பக்கா பீரியட் ஆக்சன் படமாக தயாராகி இந்தியாவின் ஐந்து மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளிவர இருக்கும் தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கார் உட்பட உலகின் உயரிய திரைப்பட விருது விழாக்களில் கொண்டு சேர்க்கப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் தான் BUDDY. முன்னதாக தமிழில் டார்லிங் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கூர்கா 100 ட்ரிக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஷாம் ஆண்டன் BUDDY படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார்.  பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரீஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த BUDDY திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். முன்னதாக நடிகர் சந்தீப் கிஷன் BUDDY படத்தில் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் திரைப்படத்திலிருந்து விலகினார். இதனை அடுத்து தற்போது அவருக்கு பதிலாக அல்லு சிரிஷ் BUDDY படத்தில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்யும் BUDDY திரைப்படத்திற்கு சக்தி சரவணன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த டெடி திரைப்படத்தின் பாணியில் டெடி பொம்மையை ஒரு கதாபாத்திரமாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த BUDDY திரைப்படம் தெறி திரைப்படத்தின் ரீமேக் அல்ல என்றும் முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தில் இருக்கும் என்றும் படக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் அல்லு சிரிஷின் பிறந்த நாளான இன்று மே 30ஆம் தேதி BUDDY திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் INTO THE WORLD OF TEDDY எனும் அசத்தலான GLIMPSE வீடியோவையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பக்கா ஸ்டைல் & ஆக்சன் நிறைந்த இந்த BUDDY GLIMPSE வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!

'சூப்பரா ஆடுனாரு!'- ARரஹ்மானுடன் இணைந்து மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடிய சேட்டைகள் பற்றி பேசிய சுட்டிகள்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'சூப்பரா ஆடுனாரு!'- ARரஹ்மானுடன் இணைந்து மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடிய சேட்டைகள் பற்றி பேசிய சுட்டிகள்! ட்ரெண்டிங் வீடியோ