கொரோனா பாதிப்பு : FEFSI மற்றும் தலைவி படக்குழுவிற்கு உதவிய கங்கனா ரனாவத் !
By Aravind Selvam | Galatta | April 21, 2020 17:00 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு உதவும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் ரூ.5 லட்ச ருபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார்.மேலும் தற்போது அவர் நடித்துவரும் தலைவி படத்தில் வேலைபார்த்த படக்குழுவினருக்காக ரூ.5 லட்ச ருபாய் உதவித்தொகையும் வழங்கியுள்ளார்.