மதராசபட்டினம், கிரீடம், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தவர் இயக்குனர் விஜய். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். தற்போது தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். 

kangana

இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமூச்சில் நடந்து வருகிறது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். 

Thalaivi kangana

இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் உள்ள கங்கனா ரனாவத்தின் அர்ப்பணிப்பு ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக 20 கிலோ எடை ஏற்றியுள்ளார் கங்கனா. இன்னும் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. ஜூன் மாதம் 26-ம் தேதி இப்படம் திரைக்கு வருமென்றும் கூறப்படுகிறது.