மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.தலைவி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தினை தலைவா,தெய்வ திருமகள்,மதராசபட்டினம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஏ எல் விஜய் இயக்கியுள்ளார்.

ஜெயலலிதாவாக தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.எம் ஜி ஆராக அரவிந்த் சுவாமி நடித்துள்ளார்.சமுத்திரக்கனி,பூர்ணா,மதுபாலா,தம்பி ராமையா,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.

தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு ட்ரைலரையுடன் அறிவித்துள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்