ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில் இருப்பது கங்கனாவின் வழக்கம். 

கங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். 

தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர். 

ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா. அது மட்டுமின்றி அவர் ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் படத்தின் பாடல் காட்சியின் நடன ஒத்திகை செய்து வருகிறார் நடிகை கங்கனா. படத்தின் நடன இயக்குனர்களில் ஒருவரான பிரசன்னபாபு கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். இந்த பாடலை டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோரியோ செய்யவுள்ளார் என்ற தகவலையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரசன்னா. மறைந்த நடிகை மற்றும் முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா நடனத்தில் சிறந்த விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை கங்கனா படத்தில் எப்படி கொண்டு வருகிறார் என்பதை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Finally back to work ! Started with #dancerehearsal for the upcoming #legendary film #thalaivi ✨#jayalalitha Mam biopic . Having a Awesome rehearsal time and practicing with the #boldandthebeautiful the most humble person and #inspiring star actress #kanganaranaut mam @kanganaranaut mam ♥️ Cant wait for the #songshoot mam and it’s going to be choreographed by my master the evergreen #brindamaster @brinda_gopal 🙏 . Firstly, it was so great and unforgettable experience working with you in #manikarnika film and now feeling happy that IAM going work with you again now in THALAIVI movie.You have been always a big inspiration mam! Stay strong❤️and keep inspiring mam! . . . . #instapic #picoftheday #lovemyjob #assistantchoreographer #prashannababu @prashannababu89 . #backtowork #shooting #kangana mam #jayalalithabiopic #kollywood & #bollywood @team.kanganaranaut @kangana_ranautdaily

A post shared by PrashannaBabu (@prashannababu89) on