மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தை இயக்குனர் A.L.விஜய் இயக்கியுள்ளார். தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்க  நடிகை பூர்ணா, சசிகலா கதாபாத்திரத்திலும் நடிகை மதுபாலா ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள  
தலைவி திரைப்படத்தை விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி தலைவி திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. முன்னதாக இன்று(ஆகஸ்ட் 23-2021) முதல் திரையரங்குகள் 50% கைகளோடு செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியானதையடுத்து தற்போது தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.